Kerala Hema Committee report | ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு உயர்நீதிமன்ற பெஞ்ச் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
Kerala Hema Committee report | ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு உயர்நீதிமன்ற பெஞ்ச் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
Published on: September 5, 2024 at 4:08 pm
Kerala Hema Committee report | மலையாளத் திரையுலகில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஹேமா கமிட்டியின் அறிக்கை சமீபத்தில் வெளியானது.
இதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகளை (PIL) விசாரிக்க பெண் நீதிபதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட சிறப்பு பெஞ்ச் ஒன்றை கேரள உயர்நீதிமன்றம் அமைக்க உள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கையை வரையறுக்கப்பட்ட மாற்றங்களுடன் வெளியிட வேண்டும் என மாநில தகவல் ஆணையத்தின் (எஸ்ஐசி) உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் சஜிமோன் பாறைல் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு, தற்காலிக தலைமை நீதிபதி ஏ. முகமது முஸ்தாக் மற்றும் நீதிபதி எஸ் மானு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்தியதை அடுத்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் பரிசீலிக்க நீதிமன்றம் சிறப்பு பெஞ்ச் அமைக்கும்” என நீதிபதி மானு கூறினார்.
இந்த வழக்கில், ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு உயர்நீதிமன்ற பெஞ்ச் முன்னதாக உத்தரவிட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க படவாய்ப்பு, வெளிநாடு, தொந்தரவு: ‘பிரேமம்’ நிவின் பாலி மீது வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com