பாட்னா,அக்.9, 2025: பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் அரசியல் அமைப்பான ஜன் சுராஜ் கட்சியின் (ஜேஎஸ்பி) முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள புதிய முகங்களில் முன்னாள் துணைவேந்தர், ஓய்வுபெற்ற அதிகாரிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.இவர்கள் பீகாரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக தேர்தல் அரசியலில் அறிமுகமாகிறார்கள். அதாவது, முதல்கட்டமாக இன்று (வியாழக்கிழமை) 51 இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
வேட்பாளர்கள் யார்?
இதில் முக்கியமாக, பாட்னா பல்கலைக் கழகம் மற்றும் நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கே.சி. சின்ஹா, பாட்னாவின் கும்ரார் தொகுதியில் கட்சி வேட்பாளராக உள்ளார்.ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே. மிஸ்ரா தர்பங்காவிலிருந்து போட்டியிடுகிறார். மூத்த வழக்கறிஞர் ஒய்.வி. கிரி மஞ்சியிலிருந்தும், போஜ்புரி நடிகர் ரித்தேஷ் பாண்டே கர்கஹார் தொகுதியிலிருந்தும் போட்டியிடுகின்றனர்.இது மட்டுமின்றி அந்தந்த பகுதிகளில் பிரபலமான 12 மருத்துவர்களும் வேட்பாளர் பட்டியலில் உள்ளனர்.
பிரசாந்த் கிஷோர் போட்டி?
இந்த நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங் கூறுகையில், “கிஷோரின் வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்றார்.எனினும், “பிரசாந்த் கிஷோர் பாண்டே அக்டோபர் 11 ஆம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவின் தற்போதைய தொகுதியான ரகோபூரில் இருந்து பரப்புரையை தொடங்குவார்” என்றார்.
பீகார் சட்டமன்ற தேர்தல்
பீகாரை பொறுத்தவரை, 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 51 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Cough syrup deaths: மத்தியப் பிரதேசத்தில் மருத்துவர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்