Gyanvapi case | ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை கூடுதல் அகழாய்வு நடத்த வேண்டும் எனக் கூறிய ஹிந்து தரப்பினரின் மனு நிராகரிக்கப்பட்டது.
Gyanvapi case | ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை கூடுதல் அகழாய்வு நடத்த வேண்டும் எனக் கூறிய ஹிந்து தரப்பினரின் மனு நிராகரிக்கப்பட்டது.
Published on: October 25, 2024 at 11:25 pm
Gyanvapi case | உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி இந்து கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகவும், கோவில்களின் சுவர்களில் இன்றளவும் இந்து தெய்வங்களின் சிற்பங்கள் காணப்படுவதாகவும் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்குகள் தற்போது வரை நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்துக்களின் தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ” இந்திய தொல்லியல் துறை கூடுதல் ஆய்வுகளை மசூதியின் மையப் பகுதியில் நடத்த வேண்டும். இந்தப் பகுதியில் ஹிந்து தெய்வங்கள் இருந்ததற்கான சாட்சியங்கள் உள்ளன” எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதி இன்று தள்ளுபடி செய்தார்.
இது குறித்து அதிருப்தி தெரிவித்த இந்து தரப்பு வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி, ” இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சட்டம் மற்றும் உண்மைக்கு புறம்பாக உள்ளது” என்றார். மேலும் கடந்த காலங்களில் நீதிமன்றம் கூறிய உத்தரவுகளையும் அவர் நினைவு கூறினார்.
ஞானவாபி மசூதியில் ஹிந்து தெய்வங்கள் காணப்படும் இடத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஹிந்து தரப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். மசூதியில் சர்ச்சைக்குரிய கட்டிடம் ஒன்றும் உள்ளது. இதனை இஸ்லாமியர்கள் நீர் வீழ்ச்சி என்றும் ஹிந்துக்கள் சிவலிங்கம் என்றும் உரிமை கோருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க தலித்துகளை தாக்கிய உயர் சாதியினர் 98 பேருக்கு ஆயுள்: மரகும்பி சாதி கலவரத்தில் நடந்தது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com