கனமழை காரணமாக பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on: December 2, 2024 at 1:19 pm
Flooding in the Pamba River | ஃபெங்கல் புயல் காரணமாக கேரளாவில் வருகிற 4-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நேற்று சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய இடங்களில் கன மழை பெய்தது. காலை முதல் பெய்த மழையால் காலையில் குறைவான பக்தர்களே வந்தனர்.
பிற்பகலில் கூட்டம் அதிகமாக இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் 18ஆம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். வரும் நாட்களில், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்றும் நாளையும் சபரிமலை பம்பை எருமேலி ஆகிய இடங்களில் கன மழை பெய்யும் என்றும் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறுகளில் இறங்கவும், குளிக்கவும் தடை விதித்து பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க கர்நாடகா – கேரளா இடையே சிறப்பு ரயில் ; ஐயப்ப பக்தர்கள் நோட் பண்ணுங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com