CPI leader D Raja: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் டி. ராஜா கூறினார்.
CPI leader D Raja: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் டி. ராஜா கூறினார்.
Published on: September 19, 2025 at 3:22 pm
Updated on: September 19, 2025 at 3:47 pm
புதுடெல்லி, செப்.19, 2025: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் டி. ராஜா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.அப்போது, “தேர்தல் ஆணையர் மீதான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், “ராகுல் காந்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு தேர்தல் ஆணையம் பதில்களை வழங்க வேண்டும். நிச்சயமாக, இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்” என்றார்.மேலும், “அரசியலமைப்பின்படி அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை ஒரு கேள்விக்குறியாக மாறிவிட்டது” என்றும் அவர் கூறினார்.
(நன்றி ஏ.என்.ஐ)#WATCH | Delhi | On Rahul Gandhi's fresh allegations against the CEC, CPI leader D Raja says, " Rahul Gandhi has raised some questions, and now the Election Commission has to give answers. Election Commission should answer, and tell the people how it is working in accordance with… pic.twitter.com/RvmlMRJPTO
— ANI (@ANI) September 19, 2025
அதானி விவகாரம்அதானி மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை செபி நிராகரித்து குறித்து பேசிய டி. ராஜா, “செபியே பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இந்நிலையில் செபி அவருக்கு மிஸ்டர் கிளீன் சான்றிதழ் வழங்கியதை நாம் மறந்துவிடக் கூடாது. இவை அனைத்தும் என்ன அர்த்தம்?” என்றார்.தொடர்ந்து, “இந்த விஷயத்தை விசாரிக்க கூட்டு நாடாளுமன்றக் குழுவை ஏன் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை? நாடாளுமன்றத்தில் கணிசமான விவாதம் எதுவும் நடக்க அனுமதிக்கப்படவில்லை” என்றார்.
மேலும், “பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தேசிய முக்கியத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.இதையடுத்து, “நாடாளுமன்றம் துடிப்பாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க : ரூ.420 கோடி செலவு.. கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு தாமதமாகுமா? டி.கே. சிவக்குமார் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com