ரூ.420 கோடி செலவு.. கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு தாமதமாகுமா? டி.கே. சிவக்குமார் பதில்!

Karnataka caste census: கர்நாடக சாதி கணக்கெடுப்பு தாமதமாகுமா? என்ற கேள்விக்கு டி.கே சிவக்குமார் பதிலளித்தார். அப்போது முதலமைச்சர் சித்த ராமையா உடன் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

Published on: September 19, 2025 at 11:55 am

பெங்களூரு, செப்.19, 2025: கர்நாடகாவில் ஆளும் காங்கிரசுக்குள் உள்ள சில பிரிவினரின் கவலைகள் காரணமாக மாநிலத்தில் சாதி கணக்கெடுப்பு மீண்டும் திட்டமிடப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

இதற்கு மத்தியில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வியாழக்கிழமை (செப்.18, 2025) முதலமைச்சர் சித்தராமையாவுடன் கலந்துரையாடிய பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.கர்நாடகாவில் ‘சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு’ என்று பிரபலமாக அறியப்படும் ‘சமூக மற்றும் கல்வி கணக்கெடுப்பு’ செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 7 வரை ரூ.420 கோடி செலவில் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், கர்நாடகாவில் உள்ள மூத்த அமைச்சர்கள் குழு, முன் இனவியல் ஆய்வு இல்லாமல் இந்த கணக்கெடுப்பு அர்த்தமற்றதாக இருக்கலாம் என்று கருதுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டி.கே. சிவக்குமார் பேச்சு

இந்நிலையில், கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மதுசூதன் ஆர். நாயக் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் சிவகுமார் மற்றும் அமைச்சரவை சகாக்களான எச்.கே. பாட்டீல், சிவராஜ் தங்கடகி, பைரதி சுரேஷ் மற்றும் பி.இசட். ஜமீர் அகமது கான் ஆகியோருடன் டி.கே சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக, “சித்த ராமையா சில அமைச்சர்களிடம் கலந்துரையாடல்களை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தன்னிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்” என பி.டி.ஐ தெரிவித்து இருந்தது.இந்த நிலையில் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “முதலமைச்சர் சித்தராமையாவுடன் கலந்துரையாடிய பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ரூ.50 கோடி பேரம்.. பாலியல் புகார்.. சமீர் மோடி மீதான புகார் பின்னணி!

ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகார்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!
Rahul Gandhi Assets Case

ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகார்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி!
26/11 Mumbai Terror Attack Remembrance

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர்

மகளிர் இடஒதுக்கீட்டை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி உறுதி
Women's Reservation

மகளிர் இடஒதுக்கீட்டை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி

உத்தரப் பிரதேச தேர்தல்.. காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.. 3 நாள்களில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு!
UP Election Seat Sharing Talks

உத்தரப் பிரதேச தேர்தல்.. காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.. 3

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com