Telangana | நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகாரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் அமைச்சரை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
Telangana | நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகாரத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் அமைச்சரை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
Published on: October 25, 2024 at 5:13 pm
Telangana | நடிகை சமந்தா ரூத் பிரபு- நாக சைதன்யா விவாகரத்து தொடர்பாக பி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவை தொடர்புப்படுத்தி தெலங்கானாவின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் சுரேகா பரபரப்பு கருத்தை தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில், அமைச்சருக்கு எதிராக ₹ 100 கோடி அவதூறு வழக்கு தொடர்ந்த கே.டி. ராமா ராவ் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “அமைச்சரின் கருத்து மிகவும் ஆட்சேபனைக்குரியது. சர்ச்சை கருத்து தொடர்பான வீடியோவை சமூக ஊடக தளங்கள் மற்றும் டிஜிட்டல் சேனல்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இதுபோன்ற கருத்துகள் சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்து இருந்தது. மேலும், நடிகை சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா அமைச்சர் சுரேகாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கையும் விடுத்தது.
அமைச்சர் சுரேகா நடிகை சமந்தா- நாக சைதன்யா குறித்து பேசுகையில், “யாரால் (நடிகை) சமந்தா விவாகரத்து ஆனது? அப்போது அமைச்சராக இருந்த கே.டி. ராமா ராவ் நடிகைகளின் போனை ஒட்டுக்கேட்டார். அவர்களின் பலவீனங்களை கண்டுபிடித்து அவர்களை மிரட்டி, இதையெல்லாம் செய்ய வேண்டும் என்பார். இது சமந்தா, நாக சைதன்யா, அவரது குடும்பத்தினர் என எல்லோருக்கும் தெரியும், இப்படி ஒரு விஷயம் நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இன்ஸ்டாவில் ஐஸ்வர்யா ராய் ஃபாலோ செய்யும் ஒரே ஒருவர் யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com