Chennai | சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Chennai | சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Published on: October 25, 2024 at 5:38 pm
Chennai | சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் மு. அப்பாவு பேசி இருந்தார். இந்தப் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு எதிராக அ.தி.மு.க.வை சேர்ந்த பாபு முருகவேல் என்பவர் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த மனுவில், “சபாநாயகர் மு. அப்பாவுவின் பேச்சு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மு. அப்பாவு மனுத்தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? உயர் நீதிமன்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com