Madurai | ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? என மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வியெழுப்பி உள்ளது.
Madurai | ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? என மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வியெழுப்பி உள்ளது.
Published on: October 24, 2024 at 7:09 pm
Madurai | திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், “திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று (அக்.24, 2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கோயில்களில் சாமி தரிசனத்துக்கு ரூ.1,000, ரூ.2,000 வாங்கினால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்?” எனக் கேள்வியெழுப்பினார்கள்.
மேலும், “ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா?” எனவும் கேள்வியெழுப்பினார்கள். தொடர்ந்து, “இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com