மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி.. சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம்!

Women’s Quota Bill Sparks Clash : மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுககு ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: April 18, 2026 at 9:09 pm

அமராவதி, ஏப்.18, 2026: நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தடுத்ததற்காக, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இந்த நடவடிக்கை பெண்களின் அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க படியை மறுத்துள்ளது. மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக தடையை ஏற்படுத்தியுள்ளன எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

சந்திரபாபு நாயுடு ட்விட்டர் பக்கம்

இந்தச் செயல் கோடிக்கணக்கான பெண்களுக்குச் சம பிரதிநிதித்துவத்தை மறுத்துவிட்டது என்றும், தேசம் இதை நினைவில் கொள்ளும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.17, 2026) தாக்கல் செய்யப்பட்ட மசோதா தோல்வியை தழுவியது.

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. முன்னதாக, தொகுதி வரையறை மசோதா நகலை தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க ஸ்டாலின் தீயிட்டு கொளுத்தினார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : மு.க. ஸ்டாலின் வடக்கு-தெற்குப் பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்..எம்.பி. ஷாம்பவி சௌத்ரி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com