கூடைப்பந்து போட்டியில் அதிக புள்ளிகள்.. ஆஸ்கர் ஷ்மிட் மரணம்!

Oscar Schmidt Dies at 68 : பிரேசில் கூடைப்பந்து ஜாம்பவான் ஆஸ்கர் ஷ்மிட் தனது 68 ஆவது வயதில் காலமானார்.

Published on: April 18, 2026 at 9:07 pm

பிரேசில்லா, ஏப்.18, 2026: கூடைப்பந்து வரலாற்றில் அதிக புள்ளிகள் குவித்த வீரர்களில் ஒருவரான பிரேசிலின் ஆஸ்கார் ஷ்மிட் காலமானார். அவருக்கு வயது 68.

உடல்நலக்குறைவு காரணமாக சாவோ பாலோ பெருநகரப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷ்மிட், மூளைக் கட்டியுடன் நீண்டகாலம் போராடிவந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று (ஏப்.17) உயிர் நீத்தார். 2013-ல் புகழரங்கில் சேர்க்கப்பட்ட ஷ்மிட், பிரேசில் மற்றும் ஐரோப்பாவில் 30 ஆண்டுகள் தொழில்முறை வீரராக விளையாடி, 2003-ல் ஓய்வு பெற்றார்.

அவர் ஐந்து ஒலிம்பிக் போட்டிகளிலும் நான்கு உலகக் கோப்பைகளிலும் பிரேசில் அணிக்காக விளையாடி, இவ்விரு போட்டிகளிலும் அதிக புள்ளிகள் எடுத்த சாதனையைப் படைத்திருந்தார்.
மூன்று தசாப்தங்கள் நீடித்த தொழில்முறை வாழ்க்கைக்குப் பிறகு, அவர் 2003-ல் தனது 45-வது வயதில் ஓய்வு பெற்றார்.

கிளப் மற்றும் நாட்டிற்காக அவர் எடுத்த 49,737 புள்ளிகள் என்ற அதிகாரப்பூர்வமற்ற உலக சாதனையை 2024-ல் லெப்ரான் ஜேம்ஸ் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: துன்புறுத்தல் புகாரில் சிக்கிய பிரபல பயிற்சியாளர்.. நீரஜ் சோப்ராவுக்கு என்ன நடந்தது?


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com