Calcutta High Court: “மார்பகங்களைத் தடவ முயற்சிப்பது போக்சோவின் கீழ் பாலியல் குற்றமாகும்; எனினும், பாலியல் வன்கொடுமை (Rape) முயற்சி அல்ல” என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Calcutta High Court: “மார்பகங்களைத் தடவ முயற்சிப்பது போக்சோவின் கீழ் பாலியல் குற்றமாகும்; எனினும், பாலியல் வன்கொடுமை (Rape) முயற்சி அல்ல” என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published on: April 25, 2025 at 10:56 pm
கொல்கத்தா, ஏப்.25 2025: மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதற்காக விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் தண்டனையை கொல்கத்தா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்.25 2025) நிறுத்தி வைத்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் அரிஜித் பானர்ஜி மற்றும் பிஸ்வரூப் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவரின் மார்பகங்களைப் பிடிக்க முயற்சிப்பது கற்பழிப்பு (Rape) குற்றமாகாது; ஆனால் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை அளிக்கலாம் என நீதிபதிகள் கூறியதாக பார் அன்ட் பெஞ்ச் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றம், “பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியமும் மருத்துவ பரிசோதனை அறிக்கையும் அவர் கற்பழிப்பு செய்யப்படவில்லை” எனபதை குறிக்கிறது. எனினும், அவரை பாலியல் கொடுமை செய்யும் முயற்சி நடந்துள்ளது.
இது, போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், அவரது மார்பகங்களைப் பிடிக்க முயன்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இது, 2012 போக்சோ சட்டத்தின் பிரிவு 10 இன் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்க: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com