Bomb threat to Tamil Nadu government house: டெல்லியில் தமிழக அரசு இல்லத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. சாணக்கியபுரியில் உள்ள இந்த இல்லம் 4 தளங்களுடன் கூடியது. தரைத்தளத்தின் கீழே பார்க்கிங் வசதியும் உள்ளது.
Bomb threat to Tamil Nadu government house: டெல்லியில் தமிழக அரசு இல்லத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. சாணக்கியபுரியில் உள்ள இந்த இல்லம் 4 தளங்களுடன் கூடியது. தரைத்தளத்தின் கீழே பார்க்கிங் வசதியும் உள்ளது.
Published on: March 1, 2025 at 7:44 pm
Updated on: March 1, 2025 at 8:21 pm
புதுடெல்லி, மார்ச் 1: தமிழ்நாடு அரசுக்கு டெல்லியில் 2 விருந்தினர் இல்லங்கள் இருந்தன. இதில் பழைய இல்லம் என அழைக்கப்பட்ட வைகை இல்லம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுகிறது. மற்றொரு இல்லமான பொதிகை இல்லம் செயல்பட்டு வருகிறது. சாணக்கியபுரியில் உள்ள இந்த இல்லம் 4 தளங்களுடன் கூடியது. தரைத்தளத்தின் கீழே பார்க்கிங் வசதியும் உள்ளது.
இங்கு மிக மிக முக்கிய பிரமுகர்களுக்காக விசாலமான 3 அறைகள், 25 ‘சூட்’ அறைகள் மற்றும் 45 டீலக்ஸ் அறைகள் உள்ளன. தரைத்தளத்தில் உணவகமும் உள்ளது. அதிகாரிகள், ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிகிறார்கள். உணவக பணியாளர்களின் எண்ணிக்கை தனி.
இ-மெயில்
இந்த இல்லத்தை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆசிஷ் குமார் உறைவிட அதிகாரியாக உள்ளார். இவரது இ-மெயில் முகவரிக்கு நேற்று காலை 10 மணி அளவில் ஒரு மெயில் வந்துள்ளது. அதில் அரசு இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்தனர். போலீசாருக்கும் ஏற்கனவே இதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்து சென்றனர். மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனமும் விரைந்தது.
அலறியடித்து ஓட்டம்
அந்த நேரத்தில் தமிழ்நாடு இல்ல உணவகத்தில் பலபேர் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அறைகளில் தங்கியிருந்த விருந்தினர்கள் வெளியே செல்வதற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர். வெடிகுண்டு மிரட்டல் பற்றிய தகவலை கேள்விப்பட்டதும் அவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள். உணவக சமையலறை தொழிலாளர்களும் பாய்ந்தனர்.
அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பிவிட்டு போலீசார் சோதனையைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 ½ மணிநேரம் நடந்த இந்த சோதனையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மிரட்டல் என்பது புரளி என தெரிய வந்தது.
மிரட்டல் விடுத்தது யாரென தெரியவில்லை. அதை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
டெல்லியில் இதுபோன்ற மிரட்டல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி, ஆஸ்பத்திரிகளை தொடர்ந்து தமிழ்நாடு இல்லமும் அதில் இடம் பிடித்துள்ளது.
வியாபாரம் பாதிப்பு
இந்த மிரட்டலால் அரசு இல்ல உணவக வியாபாரம் பாதிக்கப்பட்டது. இங்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் ரூ.2 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெறும். இதற்காக பல ஆயிரம் ரூபாய் செலவில் இறைச்சி, காய்கறி போன்றவற்றை வாங்கி இருப்பு வைத்திருப்பார்கள். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நேற்று உணவகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
மேலும், மிரட்டலைத் தொடர்ந்து அரசு இல்லத்துக்குள் நுழைவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மெட்டல் டிடெக்டர் கதவு பொருத்தப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க : டெல்லி தியேட்டரில் தீ.. அலறியடித்த ரசிகர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com