Ayodhya Ram Temples chief priest Acharya Satyendra Das dies: அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் பக்கவாதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார்.
Ayodhya Ram Temples chief priest Acharya Satyendra Das dies: அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் பக்கவாதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார்.
Published on: February 12, 2025 at 10:28 am
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மரணம்: அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
மூளை பக்கவாதத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) காலமானார். அவருக்கு வயது 85.
லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (SGPGI) மருத்துவமனையில் சிகிச்சையின் போது அவர் உயிர் பிரிந்தது.
இதனை, தலைமை பூசாரியின் சீடர் பிரதீப் தாஸ் உறுதிப்படுத்தினார். மேலும், அயோத்தி தலைமை அர்ச்சகரின் உடல் தகனம் நாளை (பிப்.14 2025) நடைபெறுகிறது என்றார்.
மேலும் அவரது உடல் தற்போது லக்னோவிலிருந்து புனித நகரத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் பிரதீப் தாஸ் கூறினார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மூளைப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரது மருத்துவ அறிக்கையில், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி தலைமை அர்ச்சகரின் மரணத்துக்கு உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கும்பமேளா பக்தர்கள் 9 பேர் விபத்தில் உயிரிழப்பு.. ஆந்திரா யாத்ரீகர்கள் 7 பேர் பலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com