AIADMK MP Thambidurai: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிகள் வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
AIADMK MP Thambidurai: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிகள் வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
Published on: March 18, 2025 at 11:12 am
புதுடெல்லி மார்ச். 18, 2025: நாடாளுமன்ற மாநிலங்களவையில் திங்கள்கிழமை (மார்ச் 17, 2025) மணிப்பூர் நிதி ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்தில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசும்போது, தி.மு.க. அரசை கடுமையாக சாடினார்.
அவர் பேசுகையில், “மத்திய அரசில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவாய்ப்பகிர்வு முறையாக கிடைக்கப்பெறுவது இல்லை என்று தி.மு.க. எம்.பி.க்கள் சொல்கிறார்கள். ஆனால் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? மக்கள் தமிழக அரசுக்கு எதிராக உள்ளனர். வளர்ச்சியில் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக சொல்கிறார்கள்.
மராட்டிய மாநிலத்தை ஏன் அவர்கள் ஒப்பிடுவது இல்லை? தொழில் வளர்ச்சியில் மராட்டிய மாநிலமா? தமிழ்நாடா? ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தபோது கூட்டணியில் இருந்த தி.மு.க. அரசுக்கு ஏராளமாக நிதி ஒதுக்கினார்.
பிறகு ஏன் தமிழ்நாடு முன்னேறவில்லை? அ.தி.மு.க அரசு செயல்படுத்திய எல்லா நலத்திட்டங்களையும் ரத்து செய்து விட்டனர். மணிப்பூர் ஒதுக்கீட்டு மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்றார்.
இவர் பேசும்போது தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒழுங்கு நடவடிக்கை கோரினர். ஆனால் அவை துணைத்தலைவர் அதனை ஏற்கவில்லை.
இதையும் படிங்க : இரும்பு பயன்பாட்டின் தமிழக வரலாறு: தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அமைச்சர் பதில்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com