தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளரும், மறைந்த தலைவர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச் 18, 2025) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அன்பு சகோதரி, மரியாதைக்குரிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
மக்களின் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் சிறக்கவும், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் மக்களின் நலனுக்காக உங்கள் சேவை தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை வாழ்த்து
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர், அக்கா பிரேமலதா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அக்கா பிரேமலதா, நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சென்னை டாஸ்மாக் தலைமையகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு; 500 போலீசார் குவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்