Ladakh protest: லடாக்கில் நடந்த போராட்டத்தில் 4 பேர் மரணம் அடைந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
Ladakh protest: லடாக்கில் நடந்த போராட்டத்தில் 4 பேர் மரணம் அடைந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
Published on: September 24, 2025 at 8:46 pm
Updated on: September 24, 2025 at 9:28 pm
லே, செப்.24, 2025: லேவில் மாநில அந்தஸ்து மற்றும் பிற கோரிக்கைகளுக்காக புதன்கிழமை (செப்.24, 2025) நடந்த பெரும் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் வன்முறையில் ஈடுபட்டு கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைந்து செல்ல வைத்தனர்.
இது தொடர்பான ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “போராட்டக்காரர்கள் லேயில் உள்ள பாஜக அலுவலகத்தையும் எரித்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “அவர்கள் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரியும், ஆறாவது அட்டவணையை நீட்டிப்பது குறித்து மத்திய அரசுடன் முன்மொழியப்பட்ட பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்ளனர் எனத் தெரிகிறது.
செய்தி நிறுவனமான பிடிஐ படி, எல்ஏபியின் இளைஞர் பிரிவு செப்டம்பர் 10 முதல் 35 நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
முன்னதாக, லே அபெக்ஸ் பாடி (எல்ஏபி) தங்கள் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையின் கீழ் லடாக்கைச் சேர்ப்பதற்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடருவதாக அறிவித்தது” எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சில நாள்களுக்குப் பிறகு லடாக்கில் புதிய போராட்டங்கள் வந்துள்ளன. மேலும், வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நாட்டில் வேலைவாய்ப்பின்மை, ஊழல் அதிகரிப்பு.. ராகுல் காந்தி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com