டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிக மூடல்.. முழு விவரம்

DMRC updates: இந்த மெட்ரோ நிலையங்களில் பயணிகள் நுழைவதும் வெளியேறுவதும் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

Published on: July 22, 2026 at 4:18 pm

புதுடெல்லி, ஜுலை 22 2026 : டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (DMRC) அறிவிப்பின்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக 16 மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அவை, லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க், பாரகம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், ஐடிஓ, டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் ஆகிவை ஆகும்.

மேலும், இந்த மெட்ரோ நிலையங்களில் பயணிகள் நுழைவதும் வெளியேறுவதும் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பயணிகள் பாதுகாப்பை முன்னிட்டு எடுக்கப்பட்ட இந்த முடிவால், குறிப்பிட்ட நிலையங்களில் ரயில்கள் இயங்கினாலும், பயணிகள் உள்ளே நுழையவோ வெளியேறவோ முடியாது.

இதுதொடர்பாக, டி.எம்.ஆர்.சி தரப்பில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த தற்காலிக மூடல், நிலைமை சீராகும் வரை தொடரும். பயணிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், மத்திய டெல்லி பகுதிகளில் பயணிகள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ராஜீவ் சௌக், மத்திய செயலகம், மண்டி ஹவுஸ் போன்ற முக்கிய இடங்களில் மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், அலுவலகப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : கொலை செய்யப்பட்ட இரு சாதுக்கள்.. ஹரித்வார் கோவில் அருகே புதைப்பு.. பகீர் சம்பவம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com