சென்னையில் பி.ஹெச்டி பட்டதாரி ஒருவர் தள்ளுபடியில் உணவு விநியோகித்துவருகிறார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.
சென்னையில் பி.ஹெச்டி பட்டதாரி ஒருவர் தள்ளுபடியில் உணவு விநியோகித்துவருகிறார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.
Published on: September 5, 2024 at 7:33 pm
சென்னையில் பி.ஹெச்டி பட்டதாரி அறிஞர் ஒருவர் நடத்தும் உணவு வண்டியை அமெரிக்கர் ஒருவர் பார்வையிட்டார்.
அப்போது, தெருவோர உணவு கடைக்கார் தான் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜியில் பிஎச்டி பட்டம் பெறுவதாகவும், பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Respect 🔥🔥🔥 Such Stories Need to be Shared Widely. Have an Inspiring Day Ahead…#FI pic.twitter.com/i9vOBZqGJS
— Fundamental Investor ™ 🇮🇳 (@FI_InvestIndia) September 3, 2024
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. வீடியோவுக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
சம்பந்தப்பட்ட வீடியோவில் லூயிஸ் சிக்கன் 65 ஐ ஆர்டர் செய்தார். அப்போதுஈ, காத்திருந்த லூயிஸ் விற்பனையாளருடன் அரட்டையடித்தார்.
மேலும் அவரது கல்விப் பின்னணியைப் பற்றி அறிந்து ஆச்சரியப்பட்டார். “நான் தற்போது எனது பிஎச்டியைத் தொடர்கிறேன்” என்று விற்பனையாளர் வீடியோவில் கூறினார்.
அதே யூடியூபர் மெரினா கடற்கரைக்குச் சென்று ஒரு கடையில் சோளம் சாப்பிட்டார். அங்கு ஒரு பெண் தன் அம்மாவுக்கு உதவி செய்து கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதை அறிந்தார்.
இந்த வீடியோவில், “தமிழ்நாட்டில் பல மாணவர்கள் பகுதி நேரமாகச் செய்து பெற்றோருக்கு உதவுவதை காணலாம்” என்றார்.
இதையும் படிங்க ரூ.50க்கு ‘பட்டர் நான் தாலி’: வொர்த்தான வீடியோவுடன் வந்த ஆனந்த் மகிந்திரா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com