Food: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோஸ் மில்க் கேக் எளிமையான முறையில் இப்படி செஞ்சி அசத்துங்க.
Food: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோஸ் மில்க் கேக் எளிமையான முறையில் இப்படி செஞ்சி அசத்துங்க.
Published on: June 25, 2025 at 3:20 pm
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான ரோஸ் மில்க் கேக் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் -¾ கப்
சர்க்கரை -½ கப்
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்
ரீபைண்ட் ஆயில் -½ கப்
ரோஸ் சிரப் -4 டேபிள்ஸ்பூன்
ரோஸ் ஃபுட் கலர் – 2 சொட்டு
மைதா -2 கப்
பேக்கிங் பவுடர் -1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா -½ டீஸ்பூன்
பிஸ்தா – 10
ரோஸ் இதழ்கள் – சிறிதளவு
ரோஸ் மில்க் தயாரிக்க
பால் -1 கப்
கன்டென்ஸ்ட் மில்க் -3 டேபிள் ஸ்பூன்
ரோஸ் சிரப் -1 டேபிள் ஸ்பூன்
கிரீன் தயாரிக்க
விப்டு கிரீம் -200ml
ஐசிங் சுகர் -½ கப்
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் காய்த்து ஆரிய பாலை சேர்த்து அதனுடன் சர்க்கரை, தயிர், ரீபைண்ட் ஆயில், ரோஸ் சிரப், ரோஸ் ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் ஒரு பாத்திரத்தின் மீது சல்லடை வைத்து மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து அரித்து எடுத்துக் கொள்ளவும். இதனை ஏற்கனவே தயார் செய்து வைத்த கலவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டி விழாமல் கலந்து கேக் மிக்சரை தயார் செய்து எடுத்துக் கொள்ளவும்.
இதனை ஒரு ட்ரெயில் சேர்த்து செட் செய்து கொள்ளவும். ட்ரே யில் கேக் ஒட்டாமல் இருக்க பட்டர் சீட் போட்டு நெய் அல்லது பட்டர் தடவிக்கொள்ளலாம். ஓவனில் 180 டிகிரயில் 15 நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்த பின்னர் அதே 180 டிகிரியில் அரைமணி நேரம் கேக்யை ஓவனில் வைத்து பேக் செய்யவும். ரோஸ் மில்க் தயாரிக்க ஒரு பாத்திரத்தில் காய்த்து ஆரிய பாலை சேர்த்து அதனுடன் கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் ரோஸ் சிரப் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: நன்னாரி சர்பத், வெண்ணிலா ஐஸ்கிரீம் போதும்.. வீட்டிலேயே ஜில் ஜில் ஜிகர்தண்டா.. இந்த ட்ரிக்க ஃபாலோ பண்ணுங்க!
தயார் செய்து வைத்த கேக்கில் உள்ள பட்டர் சீட்டை எடுத்துவிட்டு கேட்கினை கத்தியை பயன்படுத்தி சமமான அளவாக கட் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்த ரோஸ் மில்க்கை ஸ்பூன் பயன்படுத்தி சிறிது சிறிதாக கேக் மீது ஊற்றவும். கேக் ரோஸ் மில்க்கை உறிஞ்சிக் கொண்ட பின்னர் கேக்கை 30 நிமிடம் பிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
கிரீம் தயாரிக்க விப்டு கிரீமை எடுத்துக்கொண்டு கிரீமை ரெப்ரிஜிரேட் செய்த பின்னர் பீட் செய்து கொள்ளவும். இதனுடன் அரை கப் ஐசிங் சுகர் சேர்த்து 15 நிமிடம் பீட் செய்யவும். இப்போது சாப்டான கிரீம் தயாராகிவிடும். கேக் மீது கிரீமை வைத்து கேக்கின் மேல் பகுதி முழுவதும் படும்படி தடவவும். இதன் மீது பொடியாக நறுக்கிய பிஸ்தா துகள்களை பரப்பவும். சிறிது ரோஸ் இதழ்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சுவையான ரோஸ் மில்க் கேக் தயார். கேக்யை சிறு துண்டுகளாக கட் செய்து ஒரு பிளேட்டில் வைத்து சிறிது ரோஸ் மில்க் சேர்த்து பரிமாறவும்.
இதையும் படிங்க: வெங்காயத்தில் சூப்பர் கிரேவி ஈசியாக செய்யலாம்.. சப்பாத்திக்கு செம்மையா இருக்கும்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com