How to make plum cake | வீட்டிலேயே எளிதான முறையில் பிளம் கேக் செய்வது எப்படி என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?
How to make plum cake | வீட்டிலேயே எளிதான முறையில் பிளம் கேக் செய்வது எப்படி என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?
Published on: November 22, 2024 at 7:49 am
How to make plum cake | பேக்கரி சுவையில் வீட்டிலேயே சுவையான பிளம் கேக் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்
தேவையான பொருள்கள்
டூட்டி ஃப்ரூட்டி – 1/4 கப்
கருப்பு கிஸ்மிஸ் பழம் -1/4 கப்
கிஸ்மிஸ் பழம் -2 டேபிள் ஸ்பூன்
வால்நட் -1 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு -1/4 கப்
பாதாம் -1/4 கப்
செர்ரி பழம் – 1/4 கப்
பேரிச்சை பழம் -3
சர்க்கரை -1/4 கப்
பட்டர் – 100 கிராம்
மைதா -1 கப்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா -1/2 , முட்டை -2
வெண்ணிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்
அரைக்க வேண்டியவை
சர்க்கரை -3/4 கப்
ஏலக்காய் -4
கிராம்பு -5
பட்டை -2 துண்டு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் டூட்டி ஃப்ரூட்டி, கருப்பு கிஸ்மிஸ் பழம், கோல்டன் கிறிஸ்மஸ் பழம், நறுக்கிய வால்நட், சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி பருப்பு, நறுக்கிய பாதாம், செர்ரி பழம் மற்றும் சிறு துண்டுகளாக நறுக்கிய பேரிச்சை பழத்தை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை உருகும் வரை காய்க்க வேண்டும். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது.
இது நன்கு உருகி தேன் போல் ஆன பின்னர் அடுப்பை ஆஃப் செய்து அரை கப் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் இதை மீடியம் ஃபிளேமில் வைத்து ஏற்கனவே கலந்து வைத்த டிரை ஃப்ரூட்ஸ் கலவையை இதனுடன் சேர்க்க வேண்டும். அடுப்பு தீயை மீடியம் பிளேமில் வைத்து ஏழு நிமிடம் வேக விட வேண்டும். ஏழு நிமிடத்திற்கு பின்னர் அடுப்பு தீயை ஆப் செய்து டிரை ஃப்ரூட்ஸ்யைஆற வைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை, ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து பவுடர் போன்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பட்டர் சேர்த்து பட்டர் நிறம் மாறும் வரை எலக்ட்ரிக் பீட்டரை வைத்து நன்கு கலந்து விட வேண்டும். இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த சர்க்கரை பவுடரை சேர்த்து பட்டரும் சர்க்கரையும் ஒன்றாக சேரும் அளவிற்கு எலக்ட்ரிக் பீட்டரை வைத்து நன்கு கலந்து விட வேண்டும்.
இதனுடன் இரண்டு முட்டை சேர்த்து மீண்டும் நன்கு கலந்து விட வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மாவு மெது மெதுவென வரும் வரை எலக்ட்ரிக் பீட்டரை வைத்து நன்கு கலந்து விட வேண்டும். இதனுடன் தயார் செய்து வைத்த டிரை ஃப்ரூட்ஸ் கலவையை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் இதன் மீது ஒரு சல்லடை வைத்து அதில் ஒரு கப் மைதா மாவு,பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து இதனுடன் சேர்க்க வேண்டும்.
பின்னர் இந்த கலவையை மெதுவாக, ஒரே பக்கமாக கலந்து விட வேண்டும். ஒரு கேக் ட்ரேயில் பட்டர் தடவி அதன் மீது பட்டர் சீட் வைத்து அதில் தயார் செய்து வைத்த கேக் மாவினை சேர்க்க வேண்டும். அவனில் வைப்பதாக இருந்தால் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 45 நிமிடங்கள் வேகவிட வேண்டும். இதற்கு இடையில் கேக் வெந்து விட்டதா என்று பார்த்துக் கொள்ளவும்.
அடுப்பில் செய்யும் பொழுது ஒரு அகலமான பாத்திரத்தின் நடுவில் ஒரு ரிங் போன்ற ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு பத்து நிமிடம் ஹை ஃபிளேமில் சூடுபடுத்த வேண்டும். பின்னர் அந்த ரிங் ஸ்டாண்ட் மீது கேக் பாத்திரத்தை வைத்து மூடி போட்டு ஒரு மணி நேரம் மீடியம் ஃப்ளேமில் வைத்து வேக விட வேண்டும். கத்தியை பயன்படுத்தி கேக் வெந்து விட்டதா என்று பார்த்துக் கொள்ளவும். கேக் முழுவதுமாக வெந்ததும் ஒரு தட்டில் மாற்றி பரிமாறவும். இப்போது சுவையான பிளம் கேக் தயார்.
இதையும் படிங்க : ஸ்பெஷலான ஸ்பானிஷ் ஆம்லெட் ; முட்டையை இப்படி செஞ்சு பாருங்க ; சுவை அள்ளும்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com