Food: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான மட்டன் கோலா உருண்டை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Food: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான மட்டன் கோலா உருண்டை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Published on: February 26, 2025 at 1:15 pm
Updated on: February 26, 2025 at 1:27 pm
நான்வெஜ் பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய சுவையான மட்டன் கோலா உருண்டை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்- தேவையான அளவு
மட்டன்-300 கிராம்
மிளகாய் தூள் -½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
உப்பு- சிறிதளவு
கருவேப்பிலை-1 கைப்பிடி அளவு
கொத்தமல்லி இலை-1 கைப்பிடி அளவு
அரைக்க வேண்டியவை
அரைக்க வேண்டிய பொருள்களை மிக்ஸி ஜாரில் மூன்று முறை தனித் தனியே அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே மிக்ஸி ஜாரில் முந்திரி பருப்பு, சோம்பு, சீரகம், கசகசா சேர்த்து அரைத்து வேறு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
ஒரு கடாயில் எலும்புகள் நீக்கி சுத்தம் செய்து கொத்தி எடுக்கப்பட்ட ஆட்டுக்கறியை சேர்க்கவும். மட்டன் சூடானதும் நீர் வெளியேறும். நீர் முற்றிலுமாக வெளியேறி மட்டன் வெந்து வந்த பின்னர் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும். இவை நன்கு வெந்து வந்த பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். மை போன்று அரைக்க தேவை இல்லை.
இதையும் படிங்க: காரமான கனவா மீன் மசாலா ; ஜம்முன்னு செஞ்சு சாப்பிடுங்க !
ஒரு பாத்திரத்தில் அரைத்த மட்டன் மற்றும் ஏற்கனவே அரைத்து வைத்திருந்த வெங்காய விழுதினை சேர்த்து கிளறி விடவும். மேலும் இதனுடன் அரைத்து வைத்த முந்திரி சோம்பு, கசகசா, கலவை மற்றும் 2 டீஸ்பூன் பொட்டுக்கடலை மாவினை சேர்க்கவும். பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் பொடியாக நறுக்க கொத்தமல்லி இலை மற்றும் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து கலந்து விடவும். சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இந்த மாவினை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் தயார் செய்து வைத்த மட்டன் கோலா உருண்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து அடுப்பு தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து பொன்னிறமாக மாறும் வரை பொறுமையாக பொரித்து வேறு பாத்திரத்தில் மாற்றவும். இப்போது சுவையான மட்டன் கோலா உருண்டை தயார். இதை டோமேட்டோ கெட்சப் உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க : ஸ்பெஷலான ஸ்பானிஷ் ஆம்லெட் ; முட்டையை இப்படி செஞ்சு பாருங்க ; சுவை அள்ளும்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com