Madurai | வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்ற மாணவி சுஷ்மிதாவின் கனவு தற்போது நினைவாகியுள்ளது. இவருக்கு ரூ.40 லட்சம் வரை பிணையில்லா கடனை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கியுள்ளது.
Madurai | வெளிநாட்டில் கல்வி பயில வேண்டும் என்ற மாணவி சுஷ்மிதாவின் கனவு தற்போது நினைவாகியுள்ளது. இவருக்கு ரூ.40 லட்சம் வரை பிணையில்லா கடனை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கியுள்ளது.
Published on: September 18, 2024 at 8:35 am
Madurai | மதுரை திருநகரில் வசிக்கும் சுஷ்மிதா, இளங்கலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் மற்றும் மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முடித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற வேட்கை. இந்தக் கனவு மதுரையில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மூலமாக நினைவாகி உள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரியான சுஷ்மிதா, தற்போது, இங்கிலாந்தில் வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயில உள்ளார். இவருக்கு ₹40 லட்சம் பிணையில்லாமல் கல்விக் கடன் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியால் வழங்கப்பட்டுள்ளது. மதுரை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன்களை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வில் மதுரை எம்.பி சு. வெங்கடேஷனும் கலந்துகொண்டார். மேலும், மண்டல கிளை முதுநிலை மேலாளர் ஜே.சார்லஸ், கிளை மேலாளர் உதய பாஸ்கர் சானகா, உதவி மேலாளர் ஏ.சி.ஷேத்திர பாலன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும்ப படிங்க : தந்தைக்கு புற்றுநோய், வறுமை: 22 வயதில் ஐ.ஏ.எஸ் ஆன சி.பி.எஸ்.இ மாணவி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com