Actor Ajith Kumar’s next film: நடிகர் அஜித்குமாரின் அடுத்த படம் குறித்த தகவல்கள் சூசகமாக வெளியாகி உள்ளன. அந்த வகையில் நடிகர் அஜித்குமார், … இந்த இயக்குனரின் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.
Actor Ajith Kumar’s next film: நடிகர் அஜித்குமாரின் அடுத்த படம் குறித்த தகவல்கள் சூசகமாக வெளியாகி உள்ளன. அந்த வகையில் நடிகர் அஜித்குமார், … இந்த இயக்குனரின் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.
Published on: February 27, 2025 at 11:01 am
அஜித் குமார் நடிப்பில் அண்மையில் வெளியான படம் விடா முயற்சி. இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியவில்லை. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் திணறி வருகிறது. அடுத்து நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி 2025 ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இதற்கிடையில் நடிகர் அஜித்குமார் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்ட போது விபத்தில் சிக்கினார். இவர் கார் ரேஸில் ஈடுபட்டிருந்தபோது, குறுக்கே வந்த மற்றொரு கார் மோதியதில் அஜித்குமாரின் கார் தூக்கி வீசப்பட்டு, உருண்டது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் அஜித்குமாரின் அடுத்த படத்தை இந்த இயக்குனர் இயக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க கரகாட்டகாரன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை.. யார் தெரியுமா?
முன்னதாக அஜித்குமார் கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல், லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இயக்குனர்களில் எவரேனும் ஒருவர் படத்தில் நடிக்கலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜ் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கார்த்திக் சுப்புராஜ் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து டெட்ரா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து இவர் அஜித் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. அஜித் குமாரின் விடாமுயற்சி மார்ச் மூன்றாம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
இதையும் படிங்க: அதை தொடாமல் மூன்று நாட்கள்.. ரொம்ப ரொம்ப கஷ்டம்.. மனம் திறந்த சமந்தா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com