Vijay Deverakonda: ஆரம்ப காலத்தில் புதிய ஆடைகள் வாங்கும் அளவுக்கு சம்பாதிக்கவில்லை என்றும், திரைப்பட விளம்பரத்திற்காக அவர்கள் கொடுக்கும் உடைகளை அணிந்ததாகவும் விஜய் தேவரகொண்டா கூறினார்.
Vijay Deverakonda: ஆரம்ப காலத்தில் புதிய ஆடைகள் வாங்கும் அளவுக்கு சம்பாதிக்கவில்லை என்றும், திரைப்பட விளம்பரத்திற்காக அவர்கள் கொடுக்கும் உடைகளை அணிந்ததாகவும் விஜய் தேவரகொண்டா கூறினார்.
Published on: September 19, 2025 at 11:38 am
ஹைதராபாத், செப்.19, 2025: லிட்டில் ஹார்ட்ஸ் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வில் நடிகர் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தொழில்துறையில் தனது ஆரம்ப நாள்களில் தனக்குத் தேவையான ஆடைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது” என்றார்.
முன்னதாக, அந்த நிகழ்வில், படத்தின் நட்சத்திரம் மௌலி தனுஜ் பிரசாந்த், விஜய் தேவரகொண்டாவின் Rwdy பிராண்டின் சட்டையை அணிந்திருப்பதை நிகழ்ச்சி தொகுப்பாளர் கவனித்தார். இதையடுத்து, தொகுப்பாளர் இந்த ஆடை பரிசளிக்கப்பட்டதா என தெலுங்கில் கேட்டார். அப்போது விஜய தேவரகொண்டா சிரித்துக் கொண்டே இதற்குப் பதிலளித்தார்.
இதையும் படிங்க : நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு.. இருவர் என்கவுன்ட்டர்.. உ.பி.யில் பரபரப்பு!
அதாவது, “நான் மௌலிக்கு [தனுஜ் பிரசாந்த்] பரிசளித்தேன், [சாய்] மார்த்தாண்ட் (எழுத்தாளர் மற்றும் இயக்குனர்) அதை வாங்கினார். எல்லா நிகழ்வுகளிலும் விளம்பரங்களிலும் அவர் ரவுடி உடைகளை அணிந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்” என்றார்.
மேலும், “புதிய ஆடைகளை வாங்க என்னிடம் பணம் இல்லாததால், யெவடே சுப்பிரமணியத்தை விளம்பரப்படுத்தும்போது நான் அங்குள்ள திரைப்பட உடைகளை அணிந்தேன்” என்றார்.
தொடர்ந்து, “அவர்கள் இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியுடன் போதுமான அளவு சம்பாதிக்கிறார்கள் என்பதை நான் உணரவில்லை” என்றார். இந்நிலையில், ஆரம்ப காலங்களில் தாம் பெரிதளவில் சம்பாதிக்கவில்லை” என்றார்.
இதையும் படிங்க : பிரதமர் மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்.. யார் இவர்? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com