Namma Chennai | புதிய தலைமுறை சேனலில் நம்ம சென்னை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

February 17, 2025
Namma Chennai | புதிய தலைமுறை சேனலில் நம்ம சென்னை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
Published on: September 27, 2024 at 10:30 pm
Namma Chennai | புதியதலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.00 மணிக்கு “நம்ம சென்னை” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தலைநகர் சென்னையை குட்டி தமிழ்நாடு என்றே கூறலாம். மாநிலத்தில் எட்டில் ஒருவர் சென்னைவாசி தான். இதனால், தலை நகரில் வசிக்கும் மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகம்.
அவர்களது அன்றாட பிரச்சனைகள், அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்தையும் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியே நம்ம சென்னை. அதுமட்டுமின்றி, 385 வயதான சென்னையின் வரலாற்றுச் சுவடுகளும் இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
சாமானியரின் குரல், வளரும் சென்னை, அவசியம் – அத்தியாவசியம், மெட்ராஸின் அட்ரஸ் என தனித்தனி பகுதிகளாக பிரித்து, செய்திகளும் சிறப்புத் தொகுப்புகளும் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சென்னையின் அடையாளங்களாக கருதப்படும் இடங்களுக்கு செல்லும் தொகுப்பாளர், அங்கிருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கூடுதல் சிறப்பு.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com