Priya Bhavani Shankar | நடிகை பிரியா பவானி சங்கர் வளர்ந்து வரும் ஹீரோயின். இவர் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர் மீது வேண்டும் என்றே சிலர் விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
பிரியா பவானி சங்கரை பொறுத்தவரை சினிமாவில் கதாநாயகி ஆக அறிமுகமாவதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். இந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து, சினிமாவில் கதாநாயகி அந்தஸ்தை பிடித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஹரியின் யானை படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில் பிரியா பவானிசாகர் பேட்டி ஒன்றில், “என்னுடைய உடலை மூலதனமாக வச்சு என்னை நான் முன்னிறுத்த மாட்டேன்.
இந்த விஷயத்தில் நான் கவனமாக இருக்கிறேன். சினிமாவை பொறுத்தவரை நான் நெகடிவ் கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால் தப்பான விஷயத்தை முன்னிறுத்த மாட்டேன்” என்றார். இந்தப் பேட்டி கவனம் பெற்றுவருகிறது.
Karakattakaran actress kanaga: தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா. இவர், ரஜினிகாந்த், மறைந்த விஜயகாந்த், சரத்குமார்,…
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.