Hi Delayed : நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hi Delayed : நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published on: August 8, 2026 at 5:10 pm
சென்னை, ஆக. 8, 2026: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தியேட்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் முதலில் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகும் என திட்டமிடப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 14 அன்று விஷால் நடிக்கும் ‘மகுடம்’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. ஒரே நாளில் பல முக்கிய படங்கள் திரைக்கு வருவதால், போதுமான எண்ணிக்கையிலான திரையரங்குகளைப் பெறுவதில் ‘Hi’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் வெளியீட்டு தேதியை மாற்ற படக்குழு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நயன்தாரா–கவின் ஜோடி
‘Hi’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முன்னாள் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளன. வயதில் மூத்த பெண்ணை இளைய ஆண் ஒருவர் காதலிப்பதை மையமாகக் கொண்ட காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ரிலீஸ் தேதி எப்போது?
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையில் உருவான 3 பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், ‘Hi’ படத்தின் புதிய திரையரங்கு வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு தந்தையின் இதயத்துக்கு இதைவிட என்ன வேண்டும்? நெகிழ்ந்த மோகன்லால்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com