மத்திய திரைப்பட சான்றிதழ் வழங்கும் முறையில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுள்ளது.
மத்திய திரைப்பட சான்றிதழ் வழங்கும் முறையில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுள்ளது.
Published on: November 16, 2024 at 12:56 pm
New certification system for films | மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் ஒவ்வொரு படத்திற்கும் அதன் வகையைப் பொறுத்து சான்றிதழ் அளித்து வருகிறது. இதுவரை திரைப்படங்களுக்கு ‘யு’, ‘ஏ’, மற்றும் ‘யுஏ’ ஆகிய பிரிவுகளில் சான்றளித்து வந்தது. இந்நிலையில், தற்போது வயதிற்கு ஏற்ற வகையில் புதிய சில பிரிவுகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்மூலம் உகந்த வயதினருக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்க முடியும். யு வகை திரைப்படங்கள் எல்லா வயதினருக்கும், ஏ வகை திரைப்படங்கள் 18 வயது கடந்தவர்களுக்கு மட்டும் என முன்பு இருந்த நடைமுறை உள்ளது. அதனுடன் தற்போது, 7, 13, 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உகந்த வகையில், யுஏ7+, யுஏ 13+, யுஏ 16+ என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு, ஒரு திரைப்படத்தை பார்க்க அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். இருப்பினும் திரைப்படத்தைப் பற்றிய விவரத்தை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க பாக்ஸ் ஆபீஸ் வசூல்; இந்தியன் 2- விடம் தோற்ற கங்குவா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com