வேலை இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருப்பேன்.. லிங்கா பட நாயகி சோனாக்ஷி சின்கா!

Sonakshi Sinha: எனக்கு விருப்பமான பணிகள் இல்லாவிட்டாலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என லிங்கா பட நாயகி சோனாக்ஷி சின்கா தெரிவித்துள்ளார்.

Published on: June 28, 2026 at 5:35 pm

மும்பை ஜூன் 28, 2026; பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, “எனக்கு விருப்பமான வகையிலான பணிகள் கிடைக்கவில்லை என்றாலும், என் சொந்த உலகில் – அந்தச் சிறிய வட்டத்திற்குள் – நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தனது திரைப்பயணம், சமீபத்திய கதாபாத்திரங்கள், மற்றும் கோடைக்கால ஃபேஷன் தேர்வுகள் குறித்து அவர் மனம் திறந்து பேசினார்.

நடிகை சோனாக்ஷி, கடந்த சில ஆண்டுகளில் தஹாத்-இல் போலீஸ் அதிகாரி, ஹீராமண்டி-இல் தேவதாசி, மற்றும் சமீபத்திய சிஸ்டம்-இல் வழக்கறிஞர் என பல்வேறு வலுவான பெண்கள் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளார். இது குறித்து பேசிய அவர், “இப்போது நான் தேர்வு செய்யும் ஒவ்வொரு திட்டமும் என்னை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருக்கிறது. முன்பு பிறரை மகிழ்விக்க சில படங்களைச் செய்திருக்கலாம்; ஆனால் இப்போது நான் என்னை மகிழ்விக்கும் பணிகளை மட்டுமே செய்கிறேன்” என்றார்.

மேலும், எனக்கு விருப்பமான வேலை கிடைக்கவில்லை என்றாலும், என் வாழ்க்கை மிகவும் நிறைவானது. என் சொந்த உலகில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனவும் சோனாக்ஷி சின்கா கா தெரிவித்தார். சோனாக்ஷி சின்காவின் சிஸ்டம் திரைப்படம் அண்மையில் ஓ டி டி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; எம்ஜிஆரின் அரசியல் வாரிசு.. திரைக்கதை மன்னன்.. யார் இந்த கே. பாக்யராஜ்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com