Johnny Master | சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருபவர் ஜானி. ஜானி மாஸ்டர் என அறியப்படும் இவர் மீது நடன பெண் துணை இயக்குனர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தாம் மைனராக இருக்கும்போது ஜானி மாஸ்டர் என்னிடம் பலமுறை தவறாக நடந்துக்கொண்டார். மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் என்னை வன்புணர்வு செய்தார்.
அப்போது இது பற்றி வெளியே சொன்னால் சினிமா கேரியரை முடித்துவிடுவேன் என மிரட்டினார் எனப் புகாரில் கூறி இருந்தார். இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த நிலையில் ஜாமின் கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த விரைவு சிறப்பு நீதிமன்றம், அக்.7ஆம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்தது. ஜானி மாஸ்டர் நடன அமைப்பிற்காக சமீபத்தில் தேசிய விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Kudumbasthan OTT Release: குடும்பஸ்தன் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது….
ராஷ்மிகாவின் சிறந்த 5 ஆடை தொகுப்புகளை பார்க்கலாம்….
தமிழ்நாட்டில் காதலர் (பிப்.14, 2025) தினத்தில் வெளியாகும் 11 படங்கிளின் லிஸ்ட் இங்குள்ளன….
Nayanthara: நயன்தாரா மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இந்தப் படத்தில், 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி மீண்டும் திரையில் இணைகின்றனர்….
Padma Bhushan Ajith Kumar: கார் ரேஸில் வென்று மிகப் பெரிய சாதனை படைத்துள்ள நடிகர் அஜித்குமாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என நகைச்சுவை நடிகர்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்