Actress Sanam Shetty: பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான தர்ஷன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நடிகை சனம் செட்டி பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
Actress Sanam Shetty: பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான தர்ஷன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நடிகை சனம் செட்டி பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
Published on: April 6, 2025 at 3:28 pm
சென்னை ஏப்ரல் 6 2025: பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான தர்ஷன், நீதிபதி மகனிடம் தகராறு செய்த விவகாரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை சனம் செட்டி பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” நான் ஒன்றும் மதர் தெரசா கிடையாது; எனினும் மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட மாட்டேன். மனசாட்சிக்கு விரோதமாக ஒரு செயலை செய்தால் கூட என்னால் இரவில் நிம்மதியாக தூங்க முடியாது. ஆனால் தர்ஷன் கைது செய்யப்பட்ட விவகாரம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இதனை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
வாழ்க்கையில் நிறைய துரோகங்களை அனுபவித்த எனக்கு இது நியாயமானது என நான் கருதுகிறேன். நானும் ஓர் சாதாரண பெண்தான்; எனக்கும் உணர்வுகள் உண்டு” என்றார். மேலும், “இந்த பிரச்சனை வேறு யாருக்காவது நடந்திருந்தால் குரல் கொடுத்து இருப்பேன்” எனக் கூறிய நடிகை சனம் செட்டி, இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை வெளியிடுவதில் என்ன தயக்கம் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள நடிகை சனம் செட்டி, “பிரச்சனைக்கு பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் குறித்தும் வெளியே வரவேண்டும்; தவறு செய்யாதவர்கள் தண்டனை அனுபவிக்க கூடாது” எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிரபல நடிகைக்கு சிக்னல் கொடுத்த காமெடி நடிகர்.. யார் அவர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com