sand artist Sudarsan Pattnaik : இங்கிலாந்தில் மணல் மாஸ்டர் விருதைப் பெற்ற முதல் இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஆவார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
sand artist Sudarsan Pattnaik : இங்கிலாந்தில் மணல் மாஸ்டர் விருதைப் பெற்ற முதல் இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஆவார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Published on: April 6, 2025 at 4:49 pm
லண்டன், ஏப். 6 2025: உலகப் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான ஒடிசாவின் சுதர்சன் பட்நாயக்குக்கு இங்கிலாந்து அரசு மிகப்பெரிய கௌரவம் வழங்கி சிறப்பித்துள்ளது. அதாவது, மணல் சிங்பத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக தி ஃப்ரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவருக்கு, தெற்கு இங்கிலாந்தின் டோர்செட் கவுண்டியில் உள்ள வெய்மவுத்தில் சனிக்கிழமை (ஏப்.5 2025) தொடங்கிய சாண்ட்வேர்ல்ட் 2025 சர்வதேச மணல் கலை விழாவின் போது இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சுதர்சன பட்நாயக் ”உலக அமைதி” என்ற செய்தியுடன் 10 அடி உயர விநாயகர் சிலையை மணல் சிற்பமாக உருவாக்கினார்.
It’s a privilege to receive the 'Fred Darrington' British Sand Master Award at Sand World 2025, as a first Indian Sand Artist from Mr. Jon Orell, Mayor of Weymouth UK . During the International Sand Art Festval. pic.twitter.com/Xt7MTBIO3M
— Sudarsan Pattnaik (@sudarsansand) April 6, 2025
இதற்கிடையில், புகழ்பெற்ற பிரிட்டிஷ் மணல் சிற்பி பிரெட் டாரிங்டனின் நூற்றாண்டு விழாவுடன் 2025 ஆம் ஆண்டு ஒத்துப்போகிறது. இந்த நிலையில், சுதர்சன பட்நாயக் இந்த மதிப்புமிக்க விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ‘துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் அரசின் கட்டுப்பாட்டில் வக்ஃப்’: ஜெ.பி நட்டா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com