waqf amendment bill: துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் வக்ஃப் சட்டங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா கூறியுள்ளார்.
waqf amendment bill: துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் வக்ஃப் சட்டங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா கூறியுள்ளார்.
Published on: April 6, 2025 at 2:53 pm
Updated on: April 6, 2025 at 3:41 pm
புதுடெல்லி, ஏப்.6 2025: மத்திய அரசு வக்ஃப் வாரியங்களைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை; மாறாக அவை சட்டத்தின் எல்லைக்குள் செயல்படுவதை உறுதிசெய்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், ”முஸ்லிம் சமூகத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு அவர்களின் சொத்துக்கள் பயன்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6 2025) தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் 46வது நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் பாஜக தலைமையகத்தில் கொணடாட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், உரையாற்றிய ஜெ.பி நட்டா, துருக்கி மற்றும் பல முஸ்லிம் நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் வக்ஃப் சொத்துக்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக்கொண்டன” என்றார்.
மேலும், “வக்ஃப் வாரியங்களை இயக்குபவர்களிடம் விதிகளின்படி நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் நீங்கள் அதை விதிகளின்படி செய்ய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : வக்ஃப் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com