மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் நியமனம்: யார் இந்த எம்ஏ பேபி?

CPIM new party chief: எம்.ஏ. பேபி கேரள கல்வி அமைச்சராகவும், சிபிஐ(எம்) ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்தவர் ஆவார். இவர் தற்போது சி.பி.எம் (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளராக தேர்வாகியுள்ளார்.

Published on: April 6, 2025 at 9:13 pm

திருவனந்தபுரம், ஏப்.6 2025: மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்குப் பிறகு, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சிபிஐ(எம்) மூத்த தலைவரும், கேரள முன்னாள் அமைச்சருமான எம்ஏ பேபி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

71 வயதான இவர், சிபிஐ(எம்) பொலிட்பீரோ உறுப்பினர் ஆவார். முன்பு 2006 முதல் 2011 வரை கேரளாவின் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். மேலும் 1986 முதல் 1998 வரை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார்.

இந்த நிலையில், மூத்த தலைவரும் கேரளாவின் முதல் முதலமைச்சருமான இ.எம்.எஸ். நம்பூதிரிபாத்-க்குப் பிறகு, கேரளாவிலிருந்து கட்சிக்குத் தலைமை தாங்கும் இரண்டாவது தலைவராக பேபி ஆனார்.

சசிதரூர் வாழ்த்து

இந்த நிலையில் சசி தரூர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சிபிஐ(எம்) பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எனது நண்பர் எம்ஏ பேபிக்கு வாழ்த்துக்கள். அவர், ஞானம், மனிதநேயம், கண்ணியம் மற்றும் நேர்மை ஆகியவற்றுடன் கட்சியை வழிநடத்துவார்” எனத் தெரிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிட்பீரோவில் பினராயி விஜயன் மற்றும் மூத்த தலைவர்களான பி.வி.ராகவுலு, தபன் சென், நிலோத்பால் பாசு, எம்.டி.சலீம், ஏ.விஜயராகவன், அசோக் தவாலே, ராமச்சந்திர டோம், எம்.வி.கோவிந்தன், அம்ரா ராம், விஜூ கிருஷ்ணன், மரியம் தவாலே, யு.வாசுகித், அருண்தீப் பாலாகிருஷ்ணன், ஜே.எம்.ஏ. பேபி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

இதையும் படிங்க : சுதர்சன பட்நாயக்குக்கு உயரிய மணல் சிற்ப விருது.. லண்டனில் கலக்கிய இந்தியர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com