Kangana on Karan : கரண் ஜோகர் மோசமான மனிதர் அல்ல என நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
Kangana on Karan : கரண் ஜோகர் மோசமான மனிதர் அல்ல என நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

Published on: April 17, 2026 at 11:45 am
புதுடெல்லி, ஏப்.17, 2026: கங்கனா ரணாவத் சமீபத்தில் கரண் ஜோகருடன் தனது உறவைப் பற்றி மீண்டும் பேசினார். அப்போது, கரண் ஜோகரை “மோசமான மனிதர் அல்ல” என்றார். மேலும், சல்மான் கானிடம் இருந்து தனது ஆரம்ப காலத்தில் கிடைத்த அங்கீகாரத்தை நினைவுகூர்ந்தார். அது அவருக்கு மிகப் பெரிய உற்சாகமாக இருந்ததாகவும், தனது பயணத்தில் முக்கியமான தருணமாக இருந்ததாகவும் கூறினார்.
நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யுமான கங்கனா ரணாவத், தனது நீண்டகால எதிரியும் நண்பருமான கரண் ஜோஹருக்கு சமரசக் கரம் நீட்டுவது போல் தெரிகிறது. எனினும், கங்கனாவின் வழக்கமான பாணியில், அந்த சமரசக் கரம் கூர்மையான நேர்மையுடன் இணைந்தே வருகிறது.
சமீபத்தில் ஏ.என்.ஐ பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது கங்கனா, “கரண் ஜோஹர் ஒரு கெட்டவர் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் மிகவும் கர்வமுள்ளவர், மேலோட்டமானவர், நம்பகமற்றவர், பகட்டானவர்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிரிக்கெட் வீரராக ஜி.வி பிரகாஷ் குமார்.. களத்தில் அல்ல, படத்தில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com