Actress Mamita Baiju: ‘ஜன நாயகன்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிப்பிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளாரா என்று மமிதா பைஜுவிடம் கேட்கப்பட்டது. அவர் என்ன சொன்னார் தெரியுமா?
Actress Mamita Baiju: ‘ஜன நாயகன்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிப்பிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளாரா என்று மமிதா பைஜுவிடம் கேட்கப்பட்டது. அவர் என்ன சொன்னார் தெரியுமா?
Published on: June 24, 2025 at 1:14 pm
Updated on: June 24, 2025 at 1:16 pm
சென்னை, ஜூன் 24 2025: நடிகர் விஜய்யின் அரசியல் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜனநாயகன் திரைப்படம் அவரது கடைசி படம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ள நடிகை மமிதா பைஜூ விஜய்யின் கடைசி படம் குறித்த தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் 69 ஆவது திரைப்படமான ஜனநாயகன் படத்தை ஹெச் வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி, பாபட்டியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் 2026 ஜனவரி 9 இல் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விஜய்யின் கடைசி படம் என்று கருத்துக்கள் பரவி வரும் நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது. விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மமிதாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், தான் ஜனநாயகன் படப்பிடிப்பின் போது விஜய்யிடம் இது உங்கள் கடைசி படம் தானா என்று கேட்டதாகவும், அதற்கு நடிகர் விஜய் 2026 தேர்தல் முடிவை பொருத்தே அதை தீர்மானிப்பேன் என்று பதில் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com