பாக்ஸ் ஆபீஸில் சொதப்பும் சூர்யாவின் ரெட்ரோ.. 4ம் நாள் வசூல் நிலவரம்!

Retro Box Office Collection Day 4: நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வசூலில் சொதப்பி வருகிறது. இந்நிலையில், படத்தின் 4 நாள் வசூல் நிலவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Published on: May 6, 2025 at 7:00 am

Updated on: May 5, 2025 at 11:38 pm

சென்னை, மே 6 2025: நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கடந்த 4 நாள்களில் ரூ.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்தப் படத்துக்கு மே1ஆம் தேதி நல்ல ஓபனிங் வசூல் கிடைத்தது. மேலும், இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது.

ரெட்ரோ பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்ஸ்

இந்நிலையில், தொழில்துறை கண்காணிப்பாளரான சாக்னில்க் கருத்துப்படி, ரெட்ரோ திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை (மே 4 2025) 4ஆவது நாளில் ₹8.48 கோடியை ஈட்டியது எனத் தெரிவித்துள்ளது.
இதில், சூர்யா நடித்த இந்தப் படம் தமிழில் ₹7.81 கோடியையும், தெலுங்கில் ₹6,70,000ஐயும் ஈட்டியது. மேலும், வெள்ளிக்கிழமை விற்பனையில் 59.74 சதவீதம் சரிவு இருந்தபோதிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படம் நிலையான வருவாயைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யா- பூஜா ஹெக்டே உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க : வங்கிக் கொள்ளையர்களிடம் சிக்கிக் கொண்ட ஏஞ்சலினா ஜோலி.. புதிய பட அப்டேட்.!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com