முதலமைச்சர் விஜய்க்கு நன்றி.. வீடியோ வெளியிட்ட நடிகர் விஷால்

Actor Vishal: மதுபான கடைகள் மூடும் உத்தரவு முதலமைச்சர் விஜய் இன்று பிறப்பித்துள்ள நிலையில் நடிகர் விஷால் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Published on: May 13, 2026 at 1:12 pm

சென்னை, மே 12 2026: தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி பதவியேற்ற பிறகு பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார்.

பதவியேற்பு விழா நடைபெற்ற நேரு உள்விளையாட்டு அரங்கில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டம், போதைப்பொருள் தடுப்பு படை அமைத்தல் உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

இதன் தொடர்ச்சியாக, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த முடிவை பாராட்டி நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றிகள். 717 மதுபானக் கடைகளை மூடுவது மிகப்பெரிய சாதனை. குறிப்பாக கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள கடைகளை மூட எடுத்த முடிவு பாராட்டத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பெண் குழந்தைகள் பலர் டாஸ்மாக் கடைகளை கடந்து செல்லும்போது சிரமங்களை சந்தித்து வந்தனர். இதை யாராவது மாற்ற மாட்டார்களா என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது அந்த மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. அரசுக்கு பெரிய வருமானம் தரும் டாஸ்மாக் கடைகளை மூடுவது என்பது துணிச்சலான முடிவு. பொதுமக்கள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் நன்மையாக இருக்கும் என்றும், தொடர்ந்து மக்களுக்காக மேலும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் நடிகர் விஷால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : மாடலிங்கில் சாதிக்கும் தெலுங்கு பெண்கள்.. சோபிதா ஆச்சரிய பதில்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com