Ravi Mohan legal notice to Aarthi: ஆர்த்திக்கு அவரது முன்னாள் கணவர் நடிகர் ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Ravi Mohan legal notice to Aarthi: ஆர்த்திக்கு அவரது முன்னாள் கணவர் நடிகர் ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Published on: May 28, 2025 at 12:31 pm
சென்னை மே 28 2025: நடிகர் ஜெயம் ரவி ( ரவி மோகன்) தனது கரியரின் உச்சத்தில் இருக்கும்போது, ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி கடந்த ஆண்டு யாரும் எதிர் பார்க்காத வண்ணம் பிரிந்தனர்.
இதற்கிடையில் சமீபத்தில் ஆர்த்தி தனது அறிக்கையில், ” தன்னை நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவி என கூற வேண்டாம்; இரு மகன்களின் நலம் கருதி ஒன்றாக வாழவே விரும்புகிறேன்” என்பது போல் அவரது அறிக்கை இருந்தது.
தொடர்ந்து நடிகர் ரவி மோகன் குறித்தும் அவர் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்கிடையில் நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷ்கா என்பவருடன் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்டார். இருவரும் அருகருகே பேசியபடி அமர்ந்திருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார்.
இந்த வக்கீல் நோட்டீஸ் நடிகர் ரவி மோகனின் வக்கீலான கார்த்திகேய பாலன் என்பவர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வக்கீல் நோட்டீஸில் நடிகர் ரவி மோகன் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் இருந்து 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்; சமூக வலைதளங்களான பேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து தளங்களில் இருந்தும் ஆர்த்தி பதிவிட்ட கருத்துக்களை நீக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்த்தி தனது கணவரும் நடிகருமான ரவி மோகனிடமிருந்து ஜீவனாம்சமாக மாதம் ரூபாய் 40 லட்சம் கோரி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘ஜெயம் ரவிக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தேன்’; ஆர்த்தி தாயார் சுஜாதா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com