Abhishek Bachchan | அமிதாப்-ஜெயா தம்பதியரின் மகன் அபிஷேக் பச்சன். இவர் குரு, தூம், பணடி அவுர் பப்லி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மேலும், படத் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். இதுமட்டுமின்றி பிசினஸ் மற்றும் விளையாட்டு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திவருகிறார்.
இவர், 2007ல் ஐஸ்வர்யா ராய்-ஐ திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் மாதந்தோறும் அபிஷேக் பச்சன் எஸ்.பிஐ வங்கியில் இருந்து ரூ.18 லட்சம் பெறுகிறார். இது ஏன் என்று பார்க்கலாம்.
ரூ.18 லட்சம் பெறுவது ஏன்?
அபிஷேக் பச்சனின் ஆடம்பரமான ஜூஹு பங்களாவை எஸ்.பி.ஐ வாடகைக்கு எடுத்துள்ளது. இந்தப் பங்களாவின் மதிப்பு ரூ.280 கோடி என்று கூறப்படுகிறது. இதன் குத்தகை 15 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், எஸ்.பி.ஐ வங்கி அபிஷேக் பச்சனுக்கு வாடகையாக ரூ.18 லட்சம் வழங்குகிறது.
இதனால் அபிஷேக் பச்சன் குடும்பத்துக்கு கணிசமான பணம் வாடகை மூலமாக வந்து சேர்கிறது.
இது தொடர்பான அறிக்கையில், பாரத ஸ்டேட் வங்கி. அபிஷேக் பச்சனுக்கு தற்போது வங்கியில் இருந்து மாத வாடகையாக ₹18.9 லட்சம் அளிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. குத்தகையில் குறிப்பிட்ட காலகட்ட வாடகை உயர்வுக்கான ஏற்பாடுகள் உள்ளன, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாத வாடகை ₹23.6 லட்சமாக உயரும், மேலும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ₹29.5 லட்சமாக அதிகரிக்கும் எனபது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
National Lata Mangeshkar Award: பிரபல பின்னணிப் பாடகி சோனு நிகமுக்கு, லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது….
Soha Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அறையில் தூங்க நான் அனுமதிக்கப்படவில்லை என்கிறார் அவரின் சகோதரி சோஹா அலிகான்….
Deepika Padukone: கல்கி படத்தில் இருந்து விலகிய நிலையில், நடிகை தீபிகா படுகோனே, ஷாருக்கான் படத்தில் இணைகிறார்….
Deepika Padukone to leave Kalki: கல்கி 2898 AD படத்தின் அடுத்த பாகத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக…
Disha Patani: பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்