கரூரில் வும்மிரு பங்காரு ஜுவல்லர்ஸ் நகைக் கண்காட்சி.. எங்கு? எப்போது பார்க்கலாம்?

VBJ Karur Exhibition : கரூரில் வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நகைக் கண்காட்சி ஜூன் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

Published on: June 4, 2026 at 1:40 pm

Updated on: June 4, 2026 at 1:41 pm

சென்னை, ஜூன் 4, 2026: கரூர் நகரில், இந்தியாவின் பாரம்பரிய நகை நிறுவனமான வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் (வி.பி.ஜே) ஜூன் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஒரு பிரத்யேக நகைக் கண்காட்சியை நடத்தவுள்ளது.

என்னென்ன நகைகள்? எங்கு?

போலீஸ் லேன் தெருவில் உள்ள ஹோட்டல் ஹேமலா வளாகத்தில், ஹீமாஞ்சலி ஹாலில் நடைபெறும் இந்தக் கண்காட்சி, கரூர் மக்களின் தொடர்ச்சியான ஆதரவுக்காக வும்மிரு பங்காரு ஜூவல்லர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதில், மணப்பெண் நகைகள், வைர நகைகள், நெக்லஸ்கள், வளையல்கள், கம்மல்கள், மோதிரங்கள், செயின்கள், நவரத்தினங்கள் மற்றும் சாலிட்டெர் நகைகள் என பல்வேறு வகையான கலைநயம் மிக்க ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இது குறித்து, வும்மிரு பங்காரு ஜுவல்லர்ஸ் (VBJ) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமரேந்திரன் வும்மிடி, “கரூர் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள அன்பும் நம்பிக்கையும் எப்போதும் தனிச்சிறப்பானது. பாரம்பரியம் மற்றும் நவீன ரசனைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட எங்களின் சிறந்த நகைகளை இந்தக் கண்காட்சி மூலம் வழங்குவதில் பெருமை அடைகிறோம்” என்று தெரிவித்தார்.

மற்றொரு நிர்வாக இயக்குநர் ஜித்தேந்திரா வும்மிடி, “இன்றைய வாடிக்கையாளர்கள் தனித்துவமான, அணிய எளிதான மற்றும் பல்வேறு தருணங்களுக்கு பொருத்தமான நகைகளை விரும்புகிறார்கள். அதற்கேற்ப இந்தக் கண்காட்சிக்கான நகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

வும்மிரு பங்காரு ஜுவல்லர்ஸ் சிறப்பு

வும்மிரு பங்காரு ஜுவல்லர்ஸ், ஐந்து தலைமுறைகளாக இயங்கி வரும் குடும்ப பிராண்டாகும். இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தின் அடையாளமான வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை தயாரித்து வழங்கிய பெருமை இந்நிறுவனத்துக்கு உண்டு. 72 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டடமான சன்சத் பவனில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நிறுவப்பட்டது. இது வும்மிரு பங்காரு ஜுவல்லர்ஸின் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியத்துடன் உள்ள பிணைப்பை வெளிப்படுத்துகிறது.

மேலும், 125 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், மக்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்ற வும்மிரு பங்காரு ஜுவல்லர்ஸ், தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களுடன் தனது உறவை பலப்படுத்தி வருகிறது.

கண்காட்சி

கரூரில் நடைபெறும் இந்த நகைக் கண்காட்சி மூன்று நாட்களும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வெளிநாட்டு பத்திர முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்? விரைவில் வரிச் சலுகை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com