திங்களில் குளிர்வித்த மஞ்சள் உலோகம்; கடகடவென சரிந்த தங்கம் விலை: புதிய ரேட் தெரியுமா?

Today Gold rate | சென்னையில் இன்று ஆபணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்து காணப்பட்டது.

Published on: September 2, 2024 at 3:03 pm

Today Gold rate | செப்டம்பர் மாத வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது. சென்னையை பொறுத்தமட்டில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.6,670 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.53,360 ஆக விற்பனையாகிவருகிறது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு ரூ.300 வரை குறைக்கப்பட்டுள்ளது. 24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7,125 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலை

சென்னையில் கிராம் வெள்ளி ரூ.91 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.91 ஆயிரமாக உள்ளது. அந்த வகையில் ஒரே நாளில் கிலோ ரூ.1000 வரை சரிந்துள்ளது. செப்.1ஆம் தேதி வெள்ளி கிலோ ரூ.92 ஆயிரமாக விற்பனையானது.

மற்ற நகரங்களில் தங்கம் விலை

டெல்லி

செப்டம்பர் 2-ம் தேதி டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.71,620 ஆக உள்ளது.

மும்பை

மும்பையில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.71740 ஆக உள்ளது.

கொல்கத்தா

கொல்கத்தாவை பொறுத்தமட்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.71,650 ஆக காணப்படுகிறது.

எம்.சி.எக்ஸ் ஃபியூச்சர்ஸ்

அக்டோபர் 2024 காலாவதியுடன் தங்க MCX எதிர்கால ஒப்பந்தங்கள் 10 கிராம் ரூ 71,651 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது ரூ 537 குறைந்துள்ளது.
அதேசமயம், MCX ஃப்யூச்சர்ஸில் செப்டம்பர் 2024 காலாவதியாகும் வெள்ளிக்கான எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 1572 குறைந்து ரூ.83,300க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: பஜாஜ் ஆட்டோ விற்பனை அபரிதம்: பிரிட்டானியா பங்குகள் திடீர் சரிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com