Kisan Vikas Patra | ₹5.லட்சம் முதலீடு செய்தால், ₹.10 லட்சம் வரை ரிட்டன் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் குறித்து பார்க்கலாம்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Kisan Vikas Patra | ₹5.லட்சம் முதலீடு செய்தால், ₹.10 லட்சம் வரை ரிட்டன் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் குறித்து பார்க்கலாம்.
Published on: September 21, 2024 at 8:57 am
Kisan Vikas Patra | எதிர்கால பாதுகாப்பிற்காக பணத்தை சேமிக்க விரும்புபவர்களுக்காக இந்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிகப்படியான முதலீடு இல்லாமலேயே பணத்தை சேமிக்க முடியும். மேலும், இத்திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் உள்ளன.
அந்த வகையில் பணத்தை இரட்டிப்பாக்கும் இந்த போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் நாம் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பாக கிடைக்கும். 100-ன் மடங்கில் ரூ. 1000-த்தில் இருந்து முதலீடு செய்யலாம்.
கிசான் விகாஸ் பத்ரா (KVP)
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நாம் செய்யும் முதலீடு குறிப்பிட்ட நாட்களில் இரட்டிப்பாகிறது. இந்தத் திட்டதில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளையும் தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெயரிலும் தொடங்கலாம். ஒருவர் எத்தை கணக்குகள் வேண்டுமானாலும். இத்திட்டத்தின்கீழ் திறக்கலாம்.
போஸ்ட் ஆபீஸின் இந்தத் திட்டத்திற்கு வட்டி காலாண்டு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இது ஆண்டு அடிப்படையில் மாறுபடும்.
ஒருவர் இத்திட்டத்தில் ரூ. 5லட்சம் முதலீடு செய்து திட்டம் முதிர்ச்சியடையும் வரை (அதாவது 115 மாதங்கள்) இத்திட்டத்தில் நீடித்தால், அவருக்கு 7.5 சதவீத வட்டி அடிப்படையில், ரூ. 10 லட்சம் கிடைக்கும். இதில் வரியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க எஃப்.டி-க்கு 9 சதவீதம் வட்டி: இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளை நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com