Gold rate today: சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1200 உயர்ந்துள்ளது.
Gold rate today: சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1200 உயர்ந்துள்ளது.
Published on: April 10, 2025 at 9:58 am
சென்னை, ஏப்ரல் 10 2025: தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக விலை குறைந்து விற்பனையானநிலையில், நேற்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. ஒரேநாளில் இரு முறை விலையேற்றம் கண்டது. இது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று காலை கிராம் ரூ. 8,290 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், மதியம் மீண்டும் கிராமுக்கு ரூ. 185 அதிரடியாக உயர்ந்து சவரனுக்கு ரூ. 1480 உயர்ந்தது. இந்நிலையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.
தங்கம் விலை
22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று கிராம் ரூ. 8,410 -க்கும் 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ. 67,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து சவரனுக்கு ரூ. 1200 உயர்ந்துள்ளது. அந்தவகையில் இன்று தங்கம் கிராம் ரூ. 8,560 மற்றும் சவரன் ரூ. 68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தூய தங்கத்தை பொருத்தவரை கிராம் தங்கம் ரூ. 9,338 ஆகவும், சவரன் ரூ. 74,704 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தமட்டில் கிராம் வெள்ளி நேற்று கிராம் ரூ. 104-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து கிராம் வெள்ளி ரூ. 107-க்கும் 1 கிலோ கொண்ட பார் வெள்ளி ரூ. 1,07,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com