Business | 15 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும், 100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் வகையில் புதிய எலக்ட்ரானிக் சரக்கு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
February 6, 2025
Business | 15 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும், 100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் வகையில் புதிய எலக்ட்ரானிக் சரக்கு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
Published on: September 26, 2024 at 5:10 pm
Updated on: September 26, 2024 at 7:04 pm
Business | யூலர் மோட்டார் நிறுவனம் மூன்று சக்கர மின்சார வாகன விற்பனையில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து நான்கு சக்கர மின்சார வாகன விற்பனையில் கால் பதித்துள்ளது. ஸ்டோம் இ.வி (Storm EV) மற்றும் ஸ்டோம் இ.வி எல்.ஆர் (Storm EV LR) ஆகிய 2 மின்சார நான்கு சக்கர வாகன மாடல்களை நேற்று (செப்.25, 2024)அறிமுகப்படுத்தியது.
யூலர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சவுரவ் குமார் இதனை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். இந்த நான்கு சக்கர லோடு வாகனங்களில் முன்பக்க கேபின்கள் ஏ.சி. வசதி பெற்றவை. உட்புறத்தில் MapmyIndia மற்றும் WhatsApp உடன் ஒருங்கிணைக்கப்பட்ட 10.2-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை உள்பட பல மேம்பட்ட அம்சங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.
பயணத்தின் போது பொழுதுபோக்கை அனுபவிக்க ஒரு நாளைக்கு 1 ஜிபி இணைய டேட்டாவை நிறுவனமே இலவசமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் பவர் ஸ்டியரிங், டிஜிட்டல் லாக், வார்னிங் அலாரம் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. வாகன பேட்டரியைப் பொறுத்தவரை 6.6 கிலோவாட் ஆன்போர்டு சார்ஜர் இதில் பொருத்தப்பட்டு உள்ளது.
இதில் முழுமையாக சார்ஜிங் செய்வதன் மூலம் 300 கி.மீ. பயணிக்க முடியும். வெறும் 15 நிமிடங்கள் சார்ஜிங் செய்தால் 100 கி.மீ. தூரம் வரை செல்லலாம் எனத் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். மேலும், “சரக்கு வாகனங்கள் கையாள்கிறவர்களுக்கு யூலரின் இந்த மின்சார வாகனங்கள் பெரிதும் பலன் அளிக்கும்” என்றார்.
இதையும் படிங்க : ஸ்பேம் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி: புதிய வசதியை அறிமுகப்படுத்திய ஏர்டெல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com