World’s ‘top’ 100 businessmen | உலக அளவில் டாப் 100 தொழிலதிபர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. தற்போது வணிகத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வரும் தொழிலதிபர்கள் யார் என்ற அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 12-வது இடம் பிடித்துள்ளார். முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ள ஒரே இந்திய தொழில் அதிபர் இவர் மட்டுமே ஆவார். இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியினர் 6 பேர் உள்ளனர்.
மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா 3-வது இடம் பிடித்துள்ளார். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை 10-வது இடம் பித்துள்ளார். அடோப் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் 52-வது இடத்தில் உள்ளார். யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் 69வது இடத்திலும், கோஸ்லா வென்ச்சர்ஸின் நிறுவனர் வினோத் கோஸ்லா 74வது இடத்திலும் உள்ளனர். ஐஸ் லிப்ஸ் பேஸ் நிறுவன சி.இ.ஓ., தரங் அமின் 94வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க ஆறே ஆறு முதலீடு விதிதான்.. நீங்கதான் உலகின் நம்பர் 1 பணக்காரர்: வாரன் பஃபெட் இரகசியம்!
Value of Rs. 1 crore | ரூ.1 கோடியின் மதிப்பு 20 ஆண்டுகள் கழித்து என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்….
Fixed deposit | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, போஸ்ட் ஆபிஸ் ஆகிய நிறுவனங்களில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எதில் பெஸ்ட் ரிட்டன் என்பது குறித்து பார்க்கலாம்….
Fixed deposit | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்