Fixed deposit | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளது.
Fixed deposit | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளது.
Published on: November 9, 2024 at 10:11 am
Fixed deposit | 105 ஆண்டுகள் பழமையான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்தியுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் நவ.1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கியில் 3 கோடிக்கு கீழ் உள்ள நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் வங்கியால் திருத்தப்பட்டுள்ளன.
மாற்றத்தின் விளைவாக 456 நாள் காலத்திற்கு வங்கி இப்போது அதிகபட்சமாக 7.30% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா இப்போது 3.50% முதல் 6.50% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. சமீபத்திய எஃப்டி வட்டி விகிதங்கள் நவம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது. வங்கி தற்போது 7 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் உள்நாட்டு கால வைப்புகளுக்கு 3.50% மற்றும் 46 முதல் 90 நாட்களில் முதிர்ச்சியடையும் 4.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 91 முதல் 120 நாட்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 4.80% வட்டி விகிதத்தையும், 121 முதல் 180 நாட்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 5.00% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. இப்போது, 181 முதல் 332 நாட்கள் வரையிலான முதிர்வு கால நிலையான வைப்புகளுக்கு 6.35% வட்டியும், 333 நாட்கள் முதிர்வு உள்ளவைகளுக்கு 7.00% வட்டியும் வழங்கப்படும்.
இதையும் படிங்க : எல்.ஐ.சி ஹவுசிங் லிமிடெட்; ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்: வட்டி விகிதம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com