புதுடெல்லி, பிப்.8, 2026: “பாரத் ரத்னா விருது வீர சாவர்க்கருக்கு வழங்கப்பட்டால் அதன் பெருமை மேலும் உயரும்” என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா விருதை இந்துத்துவா வலதுசாரி சித்தாந்தவாதியான வீர சாவர்க்கருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக இது அமைந்துள்ளது.
அதாவது, பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத், “வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா என்பது, இந்த விருதின் கௌரவத்தை உண்மையில் உயர்த்தும் என்று கூறியுள்ளார். ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடனான ஒரு கலந்துரையாடல் அமர்வின் போது பகவத் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அப்போது அவர் வயது குறித்தும் கேட்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே பகவத்துக்கும் கடந்த செப்டம்பரில் 75 வயது நிறைவடைந்தது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளன.
பரப்புரை குறித்து பகவத்
தொடர்ந்து பரப்புரை குறித்து பேசிய பகவத், “சரியான நேரத்தில், சரியான அளவில் பரப்புரை என்பது மழை போல் இருக்க வேண்டும்” என்றார். மேலும், அதிகப்படியான பரப்புரை அகங்காரம், அதீத புகழ் வழங்கும். இதில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ‘ராகுல் பாய் டூ பப்பூ’.. மாநில அரசியலுக்கு நோ? நவஜோத் சிங் சித்து புதிய ரூட்!
Pope Leo: போப் லியோ ஐரோப்பிய நாடுகளை கிறிஸ்தவ வேர்களை மீண்டும் நினைவுகூர்ந்து, மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்….
Haritha Bhadra: இந்தியாவின் இளம் தடகள வீராங்கனை ஹரிதா பத்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்….
Narendra Modi: விடுதலை வீரர் பகத்சிங் பிறந்தநாள் விழாவில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்….
CM Vijay: மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோடிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்….
Aadhav Arjuna: மதுராந்தகம் இடைத்தேர்தல் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்…
UPI Money Transaction: உச்சநீதிமன்றம் இன்று ரூ.2,000-ஐ மீறும் UPI பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை தற்காலிகமாக நிறுத்த மறுத்துள்ளது….