India Vs Pakistan: ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 146 ரன்கள் இலக்கை இந்தியா துரத்தி பிடித்தது.
India Vs Pakistan: ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 146 ரன்கள் இலக்கை இந்தியா துரத்தி பிடித்தது.
Published on: September 29, 2025 at 12:00 am
Updated on: September 29, 2025 at 12:38 am
துபாய், செப்.28, 2025: ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதி ஆட்டம் துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்தது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 146 ரன்கள் எடுத்து அவுட் ஆனது. அந்த அணியின் ஃபர்ஹான் 57 ரன்னும், பஃஹர் ஸமான் 46 ரன்னும் எடுத்தனர். எனினும், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகி சொதப்பினர். இதில் அதிகப்பட்சமாக சைம் அயூப் அதிகப்பட்சமாக 14 ரன்கள் எடுத்து இருந்தார்.
இந்தியா பேட்டிங்
இந்த நிலையில், 147 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 5 ரன்னிலும், கில் 12 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் நடையை கட்டினார்கள்.
எனினும் திலக் வர்மா கடைசிவரை அவுட் ஆகாமல் 69 ரன்கள் குவித்தார்.
இதில், 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். மறுபுறம் சஞ்சு சாம்ஸன் 24 ரன்னில் அவுட் ஆனார். இதில் 2 பவுண்டரி ஒரு சிக்ஸர் அடங்கும். இந்நிலையில் அடுத்து வந்த ஷிவம் துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 21 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார்.
யார் இந்த திலக் வர்மா?
கடைசி 7 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் திலக் வர்மா தனது அபார ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார். இவரின் நிதானம் கலந்த அற்புதமான ஆட்டத்தால் இந்தியா பாகிஸ்தானை பொறுமையாக வீழ்த்தியது.
நம்பூரி தாகூர் திலக் வர்மா என்ற இயற்பெயர் கொண்ட திலக் வர்மா, ஐ.பி்.எல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். எனினும் இவரின் பூர்விகம் ஹைதராபாத் ஆகும். இடக்கை பேட்ஸ்மேன் ஆன இவர், வலக்கை ஸ்பின்னரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டி.. அஸ்வின் பரிந்துரைத்த வீரர் யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com